ஒன் மேன் – திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
தனி மனிதனின் கடின உழைப்பும் , தனித் திறனும் வித்தியாசமான நல்ல முயற்சியால் உருவான ஓர் உன்னதமான திரைக்காவியம் தான்
” ஒன் மேன் ” என்னும் திரைப்படம்
.ஐந்து நபர்களுக்கு அவர்களின் தனித் திறமைக்கு விருது அறிவிக்க , அவ் விருதினை பெற்றுச் செல்ல அவர்களின் பயணம் காரின் மூலம் பயணிக்கிறது. காட்டுக்குள் பயணிக்கும் அவர்களின் பயணம் நடுவழியில் தடைபடுகிறது. காரணம் அவர்கள் சென்ற கார் பழுதடைகிறது.
அந்த ஐந்து நபர்களும் காட்டுக்குள் மர்மமான சோதனைக் கூடத்தை கண்டு பிடிக்கின்றனர்.
அங்கு கிடக்கும் செல் போன் மூலம் ஒரு பரிசோதனையை முடித்தால் 10 நாட்களுக்கு உலகில் வேறு எந்த உயிரினங்களும் இருக்காது என்ற உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.அந்த அதிர்ச்சிக்கரமான தகவலை அறிந்த பிறகு அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை சித்தரிப்பதே இப் படத்தின் கதை .
சங்ககிரி ராஜ்குமார் மிகப் பெரிய அதிசயத்தை , ஆச்சரியத்தை இப் படத்தின் மூலம் நமக்கு காட்டி அதிசயக்க வைக்கின்றார். ஆச்சரியப் பட வைக்கின்றார்.
ஒரே நபராக தனி மனிதனாக நின்று நம்மை ஆச்சரியப் பட வைக்கும் இவர் தன் கையில் எடுத்திருப்பது வெறும் இயக்குநர் மட்டுமல்ல. அதையும் தாண்டி நடிகராக , ஒளிப்பதிவாளராக , படத்தொகுப்பாளராக , இசையமைப்பாளராக , சவுண்டு இன்ஜினியராக , ஒப்பனைக் கலைஞராக , தயாரிப்பாளராக , கிராபிக்ஸ் என 24 க்கும் மேற்பட்டத் துறைகளின் பணிகளை தான் ஒருவராக ஏற்று நம்மை அதிசயிக்க வைத்து இந்தப் படத்தினை வெற்றிகரமாக எடுத்து முடித்திருக்கின்றார்.
ஒரே நடிகர் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை ஒரே பிரேமில் கொண்டு வந்து நம்மை பிரம்மிக்க வைப்பது அவரின் புத்திக் கூர்மை , அறிவுத் திறன் , தொழில் நுட்ப நுணுக்கம் இவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து தனி மனிதனாக சாதனை படைத்திருப்பது கின்னஸ்ஸில் இடம் பெற வேண்டிய இந்த செயல்களை நாம் வரவேற்போம் , பாராட்டுவோம்.
இந்தக் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப் பட்டது போன்ற பிரமாண்டமான காட்சிகளும் , தொழில் நுட்ப உத்திகளும் மக்களின் கவனத்தினை தன்பால் இழுக்கும் இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வழக்கமான சினிமா பாணியைக் கடைபிடிக்காமல் , அதிலிருந்து சற்று விலகி தனி மனிதனாக நின்று யாருடைய தயவையும் நாடாமல் தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி வித்தியாசமான முறையில் படம் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. நாமும் இவரை மனதார பாராட்டுவோமே !
இந்தப் படத்தின் இறுதியில் மேக்கிங் காட்சிகளை உருவாக்கிய இந்தப் படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அவர்களின் உழைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதனை இந்தப் படத்தினை பார்க்கும் பொழுதே நமக்குத் தெரிகின்றது.
பார்க்க வேண்டிய படம் என்பதை விட ஒரு தனி மனிதனால் இப்படி சாதிக்க முடியுமா ? என நினைக்கத் தோன்றுகிறது. முடியும் நம்மால் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் இயக்குநருக்கு எங்கள் பத்திரிகை குழு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நடுநிலையாக நின்று தீர்ப்பு வழங்குவது எங்கள் பத்திரிகை குழுவின் தலையாய கடமை. கடமையைச் செய்து இருக்கிறோம். நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விடை பெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ;