” ராவ் பகதூர் ” திரைப்பட திரை விமர்சனம் !

Share the post

” ராவ் பகதூர் ” திரைப்பட திரை விமர்சனம்


கதைக் கரு :- சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டது மனித நேயம். இதனையே கதைக் கருவாகக் கொண்டு உளவியல் ரீதியாக கதையை நகர்த்தி மக்கள் மனத்தில் பதிய வைக்கும் உன்னத கதை.
கதைச் சுருக்கம் :-
பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று உண்டு ! இதில் அரசன் என்ன ஆண்டி என்ன ? எல்லாம் ஒன்று தான்.
மன்னர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் இக் கதையின் நாயகன் சத்ய தேவ் .
மெய் , மனம் , வாக்கு இம் மூன்றும் சேர்ந்தது தான் திரிகரணம்.
மனதால் நினைத்து நாவால் துதித்து உடலால் வணங்கினால் அவன் மோட்சம் அடைவான் என்பது ஓர் ஐதீகம்.

வயது மூப்பின் காரணமாக உடல் தளர்ந்து , உள்ளம் சோர்ந்து தன் வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சத்ய தேவ்.
மருத்துவர்கள் சொன்ன கெடுவைத் தாண்டியும் மரணம் தன்னை நெருங்கவில்லையே என்ற ஆதங்கம் .

தன் மனத்திற்குள் சந்தேகம் என்ற கறையான் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது சத்ய தேவிற்கு. அதனை தீர்த்து வைத்து விட்டால் மன பாரம் குறையும். தான் நிம்மதியாக கண்ணை மூடுவேன் என்று தன் நண்பரும் இவருக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருமான விகாஸிடம் தன் கருத்தை தெரிவிக்கின்றார் சத்ய தேவ்.

அவர் மனத்தை அரித்துக் கொண்டிருக்கும் அந்த சந்தேகம் தான் என்ன ? அவரின் கடந்த கால வாழ்வின் பின்னணி தான் என்ன ?

கதைநாயகி தீபா தாமஸ் உடன் தனக்கு ஏற்பட்ட காதல் ஒரு கட்டத்தில் கல்யாணத்தில் முடிகிறது. திருமண பந்தத்தில் உண்டான குழந்தை பாக்கியம் இத்யாதி இத்யாதி. இளைய மகனால் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வு அதனால் அவன் மீது தனக்கு ஏற்பட்ட வெறுப்பு. இவற்றுக்கெல்லாம் காரணம் யார் ? காரணம் எது ? என கேள்விக் கணைகள் பல தொடுத்தால் அதற்கு வரிசையாக பதில் சொல்ல தான் வேண்டும்.

இந்தப் படம் காலத்தின் ஓட்டத்தால் ஏற்பட்ட மாற்றம் , உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மன உணர்வுகளை படம் பிடித்துக் காட்டத் தவறியதே இல்லை என்று சொல்லலாம்.

தீண்டாமை என்னும் நச்சுக் காற்று காட்டுத் தீயாய் பரவி இந் நாட்டை அழிக்கும் அவல நிலையை மாற்றுவது எப்போது ? என்ற

கேள்விக்கு காட்ட சாட்டமாக விடையளிக்கிறது ” ராவ் பகதூர் ” என்ற திரைப்படம்.

தெலுங்கு திரையுலகில் ஆச்சரியம் ஊட்டும் வகையில், உளவியல. ரீதியாக மக்கள் மனத்தை வென்ற படமாக வித்தியாசமான கதையைத் தெரிவு செய்து , அதற்கு சீராக திரைக்கதை அமைத்து மிக நேர்த்தியாக இப்படத்தினை இயக்கி தனக்கென தனி முத்திரையை பதிக்கின்றார் இப் படத்தின் இயக்குநர் வெங்கடேஷ் மஹா.

ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கதாபாத்திரத்தில் கதை நாயகனாக சத்ய தேவ்.படம் முழுவதும் தன் நடிப்புத் திறத்தால் தனக்கென ஓர் இடத்தை பிடித்திருக்கின்றார் சத்ய தேவ்.

இளமை , முதுமை என இரண்டு வெவ்வேறு உருவத் தோற்றங்கள் , உடையில் மாற்றங்கள் , உடல் மொழி அசைவுகள் , வசன உச்சரிப்பு என அனைத்திலும் தனக்கென தன் நடிப்பால் தனி முத்திரையை பதிக்கின்றார் சத்ய தேவ்.

கோபம் இதனால் ஏற்படும் வெறுப்புணர்ச்சி , மன உளைச்சல் இவைகளுக்கு மூல காரணம் சந்தேகம் . சந்தேகத்தினால் ஏற்படும் மன அழுத்தம் , நிம்மதியின்மை. அத்தனையும் தன் நடிப்பால் அசத்தியிருக்கின்றார் சத்ய தேவ்.

மருத்துவரின் வேடத்தில் விகாஸ் மப்புலா. இவர் நாயகனின் நண்பனாக வருவது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் தன் நடிப்பினை அந்த சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்கின்றார் . திரைக்கதையில் நல்ல திருப்பம்.

கதைநாயகி தீபா தாமஸ் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். யாரும் எதிர்ப்பார்க்காத அந்த இரகசியத்தை இறுதிக் காட்சியில் வெளிப்படுத்தி இரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

பாலாபரசர் , ஆனந்த்பாரதி , பிரணய் வேகா , மாஸ்டர் கிரண் என நடிகர் பட்டியலில் இடம் பெறும் இவர்கள் தனக்கு கொடுத்த வேலையை சீராக செய்து மக்கள் மனத்தில் நின்று இப்படத்திற்கு உறுதுணையான இவர்களை நாம் மறக்க முடியுமா ?

வழங்கும் நிறுவனம் :- ஜிஎம்பி எண்டர்டெயின்மெண்ட்
பதாகைகள் :- ஸ்ரீசக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட் ,ஏ+எஸ் திரைப்படங்கள் , பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன்ஃபண்ட், மஹாயான மோஷன் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள் :- சிந்தா கோபாலகிருஷண ரெட்டி , அனுராக் ரெட்டி , சரத் சந்திரா , ஈஸ்வரன் விஜயராகவன்.
எண்ணம் எழுத்து இயக்கம் படத்தொகுப்பு :- வெங்கடேஷ் மஹா
நிர்வாக தயாரிப்பாளர் :- தினேஷ்யாதவ் பொல்லேபோயின
ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் பர்மர்
இசை :- ஸ்மரன் சாய்
தயாரிப்பு வடிவமைப்பாளர் :- ரோஹன்சிங்
ஆடை வடிவமைப்பாளர் :- ஷில்பாஜிஎன்எஸ்
ஒலி வடிவமைப்பாளர் :- அஸ்வின் ராஜசேகர்
நடன இயக்குநர் :- ஷ்வரன் முப்பிரி
ஒலிக் கலவை :- அரவிந்த் மேனன்
DI :- ஸ்ரீபிரசாத் சாஹூ
VFX மேற்பார்வையாளர் :- ராம்ஜி டாட்
விளம்பர வடிவமைப்பாளர் :-
Hello Tooths
சந்தைபடுத்துதல் :- முதல் காட்சி
பி.ஆர்.ஓ :- வம்சி – சேகர்
செயற்கை ஒப்பனை :- ஆராத்ரிகாதாஸ்
ஹேர்ஸ்டைலிஸ்ட் :- லக்கி சைகியா
இணை ஆசிரியர் :- ரகுநாத் காசிரெட்டி
லைன் புரொடியூசர் :- நவீன் படேல்

தயாரிப்புத் தலைவர் :- ஸ்ரீராம் எம்வி ( A+S திரைப்படங்கள் )
வணிகத் தலைவர் :- ஸ்ரவந்தி ரெட்டி ( A+Sதிரைப்படங்கள் ) தயாரிப்பு மேலாளர் :- கோண்டா ஜெகன் மோகன் ரெட்டி
தயாரிப்பு பயிற்சியாளர் :- சுமாஸ்ரீ
ஒளிப்பதிவு குழு :- சுபம் ரோஹ்ரா, விகாஷ் குமார் , சோஹைல் ஷேக் , இ.ஜே.ஜோஷ்
முதல் உதவி இயக்குநர் :- ராஜேஷ் கட்டா
டைரக்‌ஷன் டீம் :- ஜெயஸ்ரீ சாடல், அபூர்வா ஜூஜ்ஜவரபு , விக்ரம் ஓஜஸ் உத்பவ் , துருவ தேவாரா, வெங்கடேஷ் முதம் , பிரனீத் அருகே, கேசவ் குமார்பஷிகந்தி
ஆடை உதவி :- லாஸ்யசிறிஎம்

திரை விமர்சனத்தில் ” ராவ் பகதூர் ” என்ற திரைப்படம் நிச்சயமாக இரசிகர்கள் மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.எங்கள் பத்திரிக்கை குழு நடுநிலையாக நின்று விமர்சனம் செய்கின்றது… இனி வேறொரு படத்தில் சந்திப்போம் .அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ;

ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *