

” லெவன் “திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் : – நவீன் சந்திரா, அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜை, மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : லோகேஷ் அஜில்ஸ்.
மியூசிக் :- டி.இமான்.
ஒளிப்பதிவு :- கார்த்திக் அசோகன்.
படத்தொகுப்பு:- ஸ்ரீகாந்த்.என்.பி.
தயாரிப்பாளர்கள் :-
ஏ.ஆர். என்டர்டெயின்
மென்ட் – அஜ்மல்கான் & ரேயா ஹரி.
சென்னை மாநகரில் மிகவும் மர்மமான முறையில் தொடர்ந்து
ஆறு கொலைகள் நடந்துள்ளன.இதுல மரணமடைந்து இறந்தவர்கள் யார்?
எதற்கு நடந்தது. எத்தனை பேர் என்பதை துல்லியமாக துப்பறியும் தேடல் முழுமூச்சாக நடக்கிறது.
கண்டு பிடிக்க முடியாதபடி, உடலை சுவடு தெரியாமல் எரித்து அதை கொண்டு போய்
பொது இடங்களில் போடுவதை இந்த முறையை பின்தொடர்ந்து, சைக்கோ
கொலையாளியாக சின்ன அடையாளம் கூட தெரியாமல் வழக்கை விசாரிக்க முடியாமல் காவல்துறையினர் அதிகாரிகள் திணறு கிறார்கள். மறுபடியும் பல கொலை சம்பவங்கள் அடிக்கடி தொடர்கிறது.
இதற்கிடையே, வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி திடீரென்று பயங்கரமான கார்
விபத்தில் அவர் கோமா நிலைக்கு சென்று விடுகிறார்.
இதனால், இந்த வழக்கு மற்றொரு காவல்துறை அதிகாரியான
நாயகன் நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படு
கிறது.
நவீன் சந்திரா வழக்கை விசாரிக்க தொடங்கிய பிறகு
அவருக்கு ஒரு சிறிய துப்பு கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு கொலை
செய்யப்பட்டவர்கள் யார்? என்பதை துள்ளியமாக கண்டுபிடித்து, கொலையாளி யார்? என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார் ?,
எதற்காக இத்தனை கொலைகள் ? நடக்கிறது. ஆகிய கேள்விகளுக்கு சரியான விடையை அதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சொல்வதே இந்த “லெவன்”. கதைக்களம்.
லெவன் என்ற தலைப்பில் கதைக்கும் இருக்கும் தொடர்பு போல், அந்த தலைப்பில் ஒரு
மர்மான முடிச்சுகள் உள்ளது. அது என்ன? என்பதை, அதைச்
சார்ந்த கதை திரைக்கதையின் சுவாரஸ்யத்தை
அதிகரிப்பதுடன், கொலையாளி யார் ? என்பதில் இருக்கும் திருப்பங்கள்,என்ன படத்தின் மர்மங்கள்
கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை வைத்து பார்வையாளர்களை
பரபரப்பான உச்சகட்டத்திற்கு எமர்ஷிலான யுக்தியுடன் எல்லோருரையும் அழைத்துச் செல்கிறது.
நாயகனாக நடித்துள்ளார்.நவீன் சந்திரா, முகத்தில் எப்பவும் கனல் தெறிக்க
எமர்ஷிலான மனநிலையுடன் தெளிவான
சிந்தனை, வேகமான செயல்பாடுகளுடன்
வழக்குகளை முடிக்கும் திறனுடன்
விதத்திலும், சைக்கோ கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்கும்
விதத்திலும், காவல்துறை அதிகாரிக்கென்று கடுமையான கோபமுடன் வைத்தது போல் கதாபாத்திரத்தில்
எற்பே மாறாக மாற்றிககொள்கிறார். அவரையும் ஒரு பெண் காதலிக்க, அவருக்கு அதே
கம்பீரத்துடன் அட்வைஸ் செய்து அனுப்பி வைப்பவர்,
தனது கொடுத்த இலக்கை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், உடல் மொழி, வசனம் வார்த்தை
உச்சரிப்பில், சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தான் ஒரு
முழுமையான ஆக்ஷன் ஹீரோ காவல்துறையினர் என்பதை நிரூபிக்கிறார்.
பள்ளியின் தலைமை ஆசிரியையாக நடித்துள்ள அபிராமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக
நடித்துள்ள திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜை என மற்ற வேடங்களில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அவர்களது
கதாபாத்திரம் திரைக்கதையுடன் பயணிக்கும்
வகையில் அமைந்திருப்பதால், சிறிய வேடம் என்றாலும்
பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்
முதல் முறையாக கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்திற்கு இசையமைத்துள்ள டி.இமான், தனது
பாணி எந்த இடத்திலும் தெரியக் கூடாது என்பதில் மிக கவனமா தெளிவாக
இருந்துள்ளார். படத்தின் பாடல்களை கூட தனது வழக்கமான பாணியில்
கொடுக்காமல், புதிய வடிவில் கொடுத்துள்ளார். பின்னணி இசையை அளவாக கையாண்டு
படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்துள்ளார். பார்வையாளர்
களுக்கு எற்பே எப்படியோ, இசையமைப்பாளர்
டி.இமானுக்கு இது நிச்சயம் புதிய அனுபவமாக அமைந்து இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் கேமரா இரவு நேர காட்சிகளை
நேர்த்தியாக படமாக்கியுள்ளார்
கிரைம் சஸ்பென்ஸ்
திரில்லர் ஜானராக இருந்தாலும் வன்முறை காட்சிகள்
அதிகம் இல்லாத திரைக்கதை என்பதால் ஒளிப்பதிவாளர் சைக்கோ
கொலையாளியை விட, அவரை தேடும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக
நேர்த்தியாக பார்வையாளர்களிடம்
கொண்டு போய் இருக்கிறது.
கொலையாளி யார் ? என்பதை நாயகன் அபிராமி உடன் ஒரே சந்திப்பில்
கண்டுபிடித்து , அதன் பிறகும் படம் சஸ்பென்ஸுடன்
நகர்வதோடு, கொலையாளி தொடர்பான சஸ்பென்ஸை
யூகிக்க முடியாதபடி, காட்சிகளை கனகச்சிதமாக தொகுத்துள்ளார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி.
எழுதி இயக்கியிருக்கும் லோகேஷ் அஜில்ஸ், கொலை செய்யப்படும்
நபர்கள் யார்? மற்றும் எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் ? என்ற கேள்விகளை
பார்வையாளர்கள் மனதில் எழுப்பி முதல் பாதி படத்துடன் பயணிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் கொலையாளி யார் ? என்ற
எதிர்பார்ப்போடு படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். ஒரு இடத்தில்
கொலையாளி யார்? என்ற சஸ்பென்ஸை உடைப்பவர், அடுத்த
சில நிமிடங்களில் அதிலும் ஒரு
திருப்பத்துடன் வைத்து பார்வையாளர்களை
திருப்தியான முடிவை
இறுதிக்காட்சி வரை திருப்பங்களுடன் திருப்பம், என்று பரபரப்பாகவும்,
விறுவிறுப்பாகவும் திரைக்கதை பயணித்தாலும், கதை சொல்ல மற்றும்
காட்சியமைப்பில் இருக்கும் நிதானத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ்
அஜில்ஸ், வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ்
திரில்லர் ஜானர் படத்தை பார்த்த உணர்வை கொடுத்துள்ளார்.
“லெவல்”
திரைப்படத்தை பார்த்ததில் எமர்ஷனால். காட்சியமைப்புகள்
காவல்த் துறையினர் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். காவல் துறையினர்
அனைவரும் பார்க்க வேண்டிய லெவன் மன நிறைந்த இதுல கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆஹா!!! என்று சொல்லும். திரைப்படம்.