ஜெ.துரை
1508 யோகாசனங்களை தொடர்ச்சியாக மூன்றரை மணி நேரம் செய்து இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து 37 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்…

சாகனா யோகா மையம் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் உடன் இணைந்து உலக வெப்பமயமாவதை தவிர்க்கும் விதமாக காற்றுக்கு ஒரு நாள் விடுமுறை என்ற தலைப்பிலான விழிப்புணர்வுனை பொதுமக்களுக்கு ஏற்படும் விதமாக
1508 ஆசனங்களை தொடர்ந்து மூன்றரை மணி நேரம் இடைவிடாது செய்து இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது…
சகானா யோகா மையத்தை சார்ந்த 27 மாணவர்கள் நிகழ்த்திய இச்சாதனையினை இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியது…
மேலும் இந்த உலக சாதனை நிகழ்வின் போது அந்த யோகா பயிற்சி மையத்தின் நிறுவன கலைமாமணி மீனா கிருஷ்ணமூர்த்தி இந்தியா உலக சாதனை புத்தகத்தின் நிர்வாக இயக்குனர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…