BOONIE BEARS: GUARDIAN CODE* Chinese picture (English children) comedy animoshtion picture
Write by oktakenews. Rajesh
இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள
சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும்.
பூனி பியர்ஸ் தொடரில் வெளியாகும்
ஒன்பதாவது படமிது. இப்படத்தை Lin Yongchang-உம், Shao Heqi-உம்
இயக்கியுள்ளனர். இளம் வயது ப்ரையரும் ப்ராம்பளும், கிரிஸ்டல் பீக்ஸ் காட்டில் ஏற்படும்
காட்டுத்தீயில் தங்கள் தாயை இழக்கின்றனர். பல வருடங்களுக்குப்
பிறகு, அவர்கள் இருவரையும் ரோபோட் ஆராய்ச்சி
நிறுவனத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக். அங்கே, எதிர்பாராத
விதமாகத் தங்கள் தாயைப் பற்றிய செய்தி ஒன்றினைக் கேள்விப்படுகின்றனர்.
எப்படியாவது தங்கள் தாயைக் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தீர்மானித்து,
சார்லோட்டைச் சந்திக்கிறார்கள். அவளுடைய ஆம்பர் கல் அவர்களுக்கு
நம்பிக்கையை அளிக்கிறது. ஸ்க்ராப் ரெபல் கும்பலால்
சார்லோட் கடத்தப்பட்டபோது, சகோதரர்களான ப்ரையரும் ப்ராம்பளும்
விக்குடன் இணைந்து, அவளை மீட்பதற்காக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்தச் சவாலான
பயணத்தின் நடுவில், கரடி சகோதரர்களின்
தாயான பார்பராவை ஒத்த ஸ்க்ராப் கிளர்ச்சி உறுப்பினரைக் கண்டுபிடிக்கின்றனர். அது, அவர்களை
உண்மையை எதிர்கொள்ளத் தூண்டி வெற்றிக்கு இட்டுச் செல்கிறது.
சார்லோட்டை மீட்பதோடு அல்லாமல்
வாழ்க்கையையே மாற்றும் ரகசியத்தினையும் அறிந்து கொள்கின்றனர்.
தொழில்நுட்பக் குழு: –*
எழுத்து – Cui Tiezhi, Liu Zhenjie and Xu Yun
இசை – Qin Zao, Li Zhiping
இயக்கம் – Lin Yongchang and Shao Heqi.
ஹன்சா பிக்சர்ஸ் வெளியீடு