கார்டியன் திரை விமர்சனம் !!

Share the post

கார்டியன் திரை விமர்சனம் !!

ஃபிலிம் ஒர்க விஜய் சந்தர் தயாரித்து குரு சரவணன் மற்றும் சபரி இயக்கி வெளிவந்திருக்கும் படம் கார்டியன் !

ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், அபிஷேக் வினோத், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா(அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா(அறிமுகம்) மற்றும் பலர் நடித்து உள்ளாரா!

ஒளிப்பதிவு: K.A சக்திவேல்

இசை: சாம் சி எஸ்

படத்தொகுப்பாளர் : M.தியாகராஜன்

பிறந்ததிலிருந்தே எந்த செயலாக இருந்தாலும் அதில் தோல்வியை மட்டுமே சந்தித்து, தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத பெண் என்று நினைத்துக் கொள்கிறார் நடிகை ஹன்சிகா. எதை தொட்டாலும், அந்த செயல் முடிவில்லாமல் போய்விடுகிறது ஹன்சிகாவிற்கு.

இந்த சூழலில், காலில் ஆணி ஒன்று குத்திவிட, ஹன்சிகாவின் இரத்தம் ஒரு படிகக்கல் போன்ற ஒரு பொருளில் பட்டுவிடுகிறது

அந்த நாள் முதல், ஹன்சிகா தொட்டதெல்லாம் பொன்னாக மாறுவது போல், கிடைக்காது என்று இருந்த வேலை கிடைக்கிறது,

தொந்தரவு செய்த நபர் ஒருவர் கொல்லப்படுகிறார், தோல்வியில் முடியும் என்று இருந்த மேட்ச், ஹன்சிகா சொன்னதும் ஜெயித்துவிடுகிறது.

இப்படியாக தொடர்ச்சியாக நல்லவிஷயம் நடக்கிறது ஹன்சிகாவின் வாழ்வில்.

இதற்குபின்னால் ஒரு அமானுஷ்யம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்

ஹன்சிகா. ஒருநாள் அவர் முன்னால் தோன்றிய அந்த அமானுஷ்யம், தான் நான்கு பேரை கொல்ல போவதாகவும் அதுவும் உன்னை வைத்து தான் அவர்களை கொல்லப் போவதாகவும் கூறிவிடுகிறது.

இதனால் என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறார் ஹன்சிகா.

யார் அந்த அமானுஷ்யம்? எதற்காக நால்வரை கொல்ல நினைக்கிறது.?? ஹன்சிகா என்ன செய்தார்..?? என்பதே இப்படத்தின் கதை.

நாயகி ஹன்சிகா மீதுதான் ஒட்டுமொத்த படமும் பயணமாகிறது.

அதுமட்டுமல்லாமல், பேயாக வரும் காட்சிகளிலும் இவரே நடிப்பதால், ப்ளாஷ் பேக் காட்சியை தவிர்த்து மற்ற காட்சியெல்லாம் இவரே நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

க்யூட்டாக நடிப்பதாக கூறி ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சிகளை சொதப்பி வைத்திருக்கிறார்

ஹன்சிகா.
வழக்கமான பேய் படமாக கதை நகர்வதால், பெரிதான சுவாரஸ்யத்தை இப்படத்தில் இருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

காமெடி என்ற பெயரில் தங்கதுரை மற்றும் மொட்டை ராஜேந்திரன் அடிக்கும் கெளண்டர்கள் பெரிதாக சிரிப்பைக் கொண்டுவரவில்லை.

காட்சிகள் ஏதோ கடந்து செல்ல வேண்டும் என்ற முனைப்பிலே செல்வது படத்திற்கு பெரும் சரிவு தான். படத்தைக் கொஞ்சம் தாங்கி நிறுவத்துவதென்றால் அது ஒளிப்பதிவு தான்.

ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் காட்சி வரையிலும் ஒளிப்பதிவின் மெனக்கெடல் நன்றாகவே தெரிந்தது. ஆங்காங்கே பயமுறுத்தும் வகையில் காட்சி இருந்தது படத்திற்கு சற்று பலம்.

சாம் சி எஸ்’ன் இசையில் பின்னணி இசை பெரிதான ஒரு தாக்கத்தை படத்தில் ஏற்படுத்தவில்லை. சத்தத்தை அதிகமாக கொடுத்து காட்சிகளின் உயிரோட்டத்தை சற்று குறைத்துவிட்டார் சாம்.

கார்டியன் – அருமை உள்ளது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *