
பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.
ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர்,
பசுபதி,
ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த்
உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ்.

படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி,
படத்தொகுப்பு- செல்வா RK.
கலை- ரகு,
சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம்.
உடைகள் – சபீர்
நிழல்படம் – Rs ராஜா
PRO- குணா.