ஜெ.துரை
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக நடந்த விழாவில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு
அழகு கலை கண்காட்சி குறித்தும் அழகு துறை சார்ந்த பெண்களுக்கு போட்டிகள் நடைபெற்றன
இதுகுறித்து சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன் வெல்ஃபேர் அசோசியேசன் தலைவர் முத்துலட்சுமி ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது..
பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ள துறையாக உள்ளது
கிராமத்தில் இருப்பவர்களும் படித்துவிட்டு எப்படி எங்கே செல்ல வேண்டும் என தெரியாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கிறோம்
இந்த அழகு சாதன துறையில் அதிகமாக பியூட்டிசியன் மற்றும் மேக்கப் தேவைப்படுகின்றனர்
இந்தியாவின் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருகிறோம்
பெண்களுக்கு அழகு கலை துறையை சேர்ந்தவர்களுக்கு மிகவும் பெரிய படிகல்லாக இருக்கும்
குறைந்த செலவில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்
இத்துறையை பெருந்தொழில் மற்றும் சிறு தொழிலாகவும் செய்ய முடியும்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அழகு கலைத்துறையை சேர்ந்த பெண்கள் கலந்துள்ளனர்
சிறப்பாக ஒப்பனை செய்த கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது