“லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” திரைப்பட விமர்சனம்…

Share the post

“லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
வெற்றி,பிரிகிடா
சாகா, ரங்கராஜ் பாண்டே, மாறன்,
லிஸிஆண்டனி,

கவிதாபாரதி, சுப்பிரமணிய சிவா,கன்யா பாரதி, அருவி மதன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :-
தயாள் பத்மநாபன்.

மியூசிக்:-
தர்புகா சிவா.

ஒளிப்பதிவு:-
எம்.வி.பன்னீர் செல்வம்.

படத்தொகுப்பு:-
பூபதி‌ வேதகிரி.

1944 -ஆண்டு சென்னையில் நடந்த சி.என். லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு

இது ஒரு கவன ஈர்ப்புக்கு இந்த பிரபல தலைப்பை வைத்தது இயக்குநர்
தயாள் பத்மநாபன்,

இந்தப்படத்தில் மூலம் மரண தண்டனையை ஒரு

விதத்தில் கொலை தான், என்ற விவாத்தை முன் வைத்துள்ளார்.

ஒரு குற்றவாளியின் சந்தர்ப்ப சூழ்நிலை நடந்த சம்பவத்தையும் வைத்து மற்றும் குற்றவாளியின் பின்னணி

ஆகியவற்றை கருத்தில் வைத்து கொண்டு இதற்கு நீதி

வழங்க வேண்டுமென்று தவிர, வெறும் குற்றத்தின்

அடிப்படையில், ஒருவருக்கு மரண தண்டனை

வழங்கப்படுவது இது. நீதி இல்லை, என்பதை இதனை

உரக்க சொல்வது தான் படத்தின் மையக்கரு கதைக்களம்.

படிப்புக்கு ஏற்ற மாதிரி வேலை கிடைக்காததால், வருமையில் வாழும்

பரிதாபமாக சிக்கித்தவிக்கிற நாயகன் வெற்றி

திருடுகிறார். ஒரு வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக

வைத்துக்கொண்டு பயணிக்கின்றது அவர் சந்தர்ப்ப

சூழ்நிலையால் கொலை அவர் குற்றவாளியாகிறார்.

வழக்கை விசாரிக்கிற நீதிமன்றம்

அவருக்கு மரண தண்டனை விதிக்கின்றன.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன்னுடைய

குற்றத்திற்கான தண்டனையாக இருப்பினும், அதன் மூலம் தனக்கான நீதி

மறுக்கப்பட்டிருக்கிற வாதத்தை வெற்றி முன் வைக்கிறார்.

அவரது வின்வாதம் சரியா ? தவறா ? இல்லையா?என்பதை ஒரு மனித உணர்வுகளின்

அடிநாதத்தை தொடும் விதத்தில் சொல்வது தான் “லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு”.

வெற்றியின் அலட்டல் இல்லாமல் சாதாரணமாகவும் நிதானமாக அளந்து

நடிப்பில், பதற்றம் இல்லாமல் வசன உச்சரிப்பில்

திரைக்கதையில் இடம்பெறும் விவாதங்களுக்கு கூடுதல் பலம்
சேர்க்கின்றன.

இறுக்கமான மனநிலையுடன் இருப்பினும், தனது கருத்துகளை

தெளிவாக எடுத்துக்கூறுகிற வெற்றி, படம்

முழுவதும் பேசிக்கொண்டே இருக்கும்போது, அந்த

காட்சிகளை சரியான முறையில் கையாண்டு

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கிறார் பிரிகிடா சாகாவுக்கு, கிராமத்து வேடம்

சற்று ஒத்துப்போக
வில்லை என்பதால், எதார்த்தமான

நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தில்

தன்னை பொருத்தமா
இருக்கிறார்.

சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

ரங்கராஜ் பாண்டே, வெற்றியின் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யும்

கதாபாத்திரத்தில் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாதிடுவது

ரங்கராஜ் பாண்டேவுக்கு மிக எளிதான பணி என்றாலும், அதை

ஒரு கதாபாத்திரமாக கையாளும் சவாலை மிக சாமர்த்தியமாக

கையாண்டிருப்பவர், தனது அளவான நடிப்பின் மூலம்

கதாபாத்திரத்திற்கும்திரைக்கதை ஓட்டத்திற்கும் பெரும் பலமாகவே பயணித்திருக்கிறார்.

வெற்றியின் நண்பராக நடித்திருக்கிறார் மாறன், அம்மாவாக நடித்திருக்கிறார் லிஸி ஆண்டனி,

தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கிறார். கவிதா பாரதி,

வெற்றியை தூக்கிலிடும் ஹேங்மேனாக நடித்திருக்கிறார்.

சுப்பிரமணிய சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது கனகச்சிதமான

நடிப்பின் மூலம் அந்த அந்த கதாபாத்திரமாகவே பார்வையாளர்கள்

மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம், செயற்கையான வெளிச்சத்திற்குப்

பதிலாக, கதையின் சூழலுக்கு ஏற்ப சூரிய ஒளியையும், குறைவான

விளக்குகளையும் பயன்படுத்தி காட்சிகளை

படமாக்கியிருப்பது பார்வையாளர்களையும் கதையுடன் பயணிக்க

வைக்கிற. சில இடங்களில் ஏஐ காட்சிகள் பயன்படுத்தப்பட்டு
இருந்தாலும், சில நிஜ காட்சிகளை கூட

அதற்கு ஏற்ப படமாக்கியிருப்பது, கேமரா அசைவுகள்

மூலம் மாயாஜாலம் நிகழ்த்த முயற்சிக்காமல்,

கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களின் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

தர்புகா சிவாவின் இசையும், பாரதியார், பாரதிதாசன் மற்றும்

தயாள் பத்மநாபன் ஆகியோரது பாடல் வரிகளும் கதைக்களத்தையும்,

கதை மாந்தர்களின் மனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் பயணித்திருக்கிறது.

பின்னணி இசை இறுக்கமான சூழல்களுக்கு ஏற்ப

பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருப்பது பல இடங்களில்

அமைதியான சூழ்நிலைகளை மெளனமாக கடந்து, கதாபாத்திரங்களின்

நுணுக்கமான அசைவுகள் மற்றும் உடல் மொழியை கவனிக்க வைக்கின்றன.

குற்றவாளியின் பார்வையில் மரண தண்டனை என்பது

ஒருவருக்கான நீதி மறுக்கப்படுவதற்கு சமம், என்ற ரீதியில் காட்சிகள்

வாதங்களாக நகர்வதில், அதை சுவாரஸ்யம் மிக்க படமாக

நகர்த்துவதற்கு படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரியின்

பணிகைகொடுத்
திருக்கின்றது.

கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் ஆகியோரது திரைக்கதை மற்றும்

வசனங்கள் ஒரு எளிமையான கதைக்கு பெரும் வலிமை

சேர்த்திருக்கின்றன. படத்தில் வசன காட்சிகள் அதிகம் இருப்பதாலும்,

வசனங்கள் அனைத்தும் கைதட்டி பாராட்டும் விதத்தில் இருப்பது படத்திற்கு

பெரும் பலம். திரைக்கதையும் மரண தண்டனை

தேவையா ? என்ற கேள்வியை கடந்து, அதை ஒரு

எதிர்பார்ப்பு மிக்க படமாக நகர்த்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றனது.

கதை எழுதி இயக்கியிருக்கிறார். தயாள் பத்மநாபன், எளிமையான கதை

மூலம் மனிதர்களின் மனங்களையும், எண்ணங்களையும்,

தன் வலிமையான எழுத்துக்கள் மூலம்

திரை மொழியில் பிரதிபலிப்பதில் வல்லவர்.

அப்படிப்பட்ட தனது எழுத்தின் மூலம் மரண தண்டனை

அறவே நீக்கப்பட வேண்டும், என்ற தனது வாதத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்கு விதிக்கப்படுகின்ற மரண தண்டனையும் ஒரு

கொலை தான், என்ற வாதத்தை முன் வைக்கிறார். இயக்குநர் தயாள் பத்மநாபன், அதன் பின்னணியில்

இருக்கும் நியாயத்தை மட்டும் அல்ல நீதி என்பது என்ன ? என்பதையும்

மிக தெளிவாக விவரித்து, ஒவ்வொரு மனிதனுக்கும்

உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு, அரசு உட்பட யாருக்கும் அந்த

உரிமையைப் பறிக்கும் அதிகாரம் இல்லை, என்ற கருத்தை அழுத்தமாக

சொல்லி, மீண்டும் ஒரு முறை மக்களுக்கான படைப்பை கொடுத்து பாராட்டு பெறுகிறார்.

படம்‌ பார்த்தத்தில், “லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு”

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம் ஒரு

மனிதன் கொலை செய்த குற்றத்திற்கு தண்டனையை

அனுபவித்து வருபவனின் வாழ்வியலின் சிறந்த படைப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *