“மார்னிங் கஃபே”
புதுயுகம் தொலைக்காட்சியில் காலைப்பொழுதை இனிமையாக்க திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “மார்னிங் கஃபே”

மார்னிங் கஃபே நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகள் உள்ளன. காலை நேரத்தை புத்துணர்ச்சியாகவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சிகள் கற்றுத் தரப்படுகிறது. சித்த மருத்துவர்கள் பெண்கள் நலன் குறித்து வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு எப்படி உடல் நலனை காத்துக் கொள்ளலாம் என்று சித்த மருத்துவர் உஷா நந்தினி & சித்த மருத்துவர் ஜெயரூபா எடுத்துரைப்பார் .ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை சமையல் மூலிகைகளைக் கொண்டு உடலில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்று தீர்வு காணுதல் பற்றியும் மேலும் பெண்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என எளிய முறையில் வழங்கப்படும் பயிற்சிகள் போன்ற பயனுள்ள இந்நிகழ்ச்சிகள் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


