
நல்ல படம் என்னும் படத்தின் திரைவிமர்சனம் :-
கதைநாயகன் குடி போதைக்கு அடிமை .எந்த நேரமும் குடிதான். தான் மட்டுமே குடிக்காமல் நண்பர்களோடு சேர்ந்தேக் குடிப்பது இவரது வழக்கம். இவரது வாடிக்கை.
பெண்களை பாதுகாக்கும் சங்கம் இருக்கிறது. விவசாயிகளை பாதுகாக்கும் விவசாய சங்கம் இருக்கிறது. நெசவாளர்களை பாதுகாக்கும் நெசவாளர் சங்கம் இருக்கிறது. குடிகாரர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக மதுப்பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் இருப்பதை பார்த்து இருக்கிறீர்களா ?
இந்தச் சங்கத்தை நடத்துபவர் வேறு யாருமில்லை. நம்ம கதாநாயகன் தான்.
ஒரு கால கட்டத்தில் நாடு முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அதனால் கதாநாயகனும் அவர் ஏற்படுத்திய சங்கத்தினரும் என்ன ஆனார்கள் என்பதே இப் படத்தின் கதை.
மதுக்கடையை மூடினால் , மது விற்க தடை செய்தால் என்ன செய்வார்கள் குடி குடிக்கும் குடி மக்கள் கள்ளச் சாராயத்தை தேடித்தான் அலைவார்கள். பகல் பன்னிரண்டை கடிகார முள் தொட்டால் போதும் சரக்கு போடனும் சரக்கு போடனும்ன்னு குடிகாரர்களில் சிலர் அலைவார்கள். அலைபேசி மூலம் பேசி தொல்லைப் படுத்துவார்கள். என்ன செய்வது ? குடி அவர்களை பாடாய் படுத்துகிறது .
கதாநாயகன் கள்ளச் சாராயம் காய்ச்சுவதில் படு பிஸியாக இருக்கிறார்.
திரை நட்சத்திரங்கள் :-
கதாநாயகனாக ஹரிஷ் . குடிகாரனாக நடித்திருக்கிறார். சாராயம் காய்ச்சுவதில் முழு மூர்ச்சாக ஈடுபடுகிறார். காதல் விவகாரம் ஆனாலும் சரி , அடிதடி விவகாரத்திலும் சரி நடிப்பில் எட்டிப்பார்க்கிறார்.
குடிகாரனை , பொறுக்கியை , ரவுடியை , கொலைக்காரனை காதலிக்கிற பெண்களுக்கு பஞ்சம் இல்லாத நாடு இது. இந்தப் பெண்களில் ஒருத்தி தான் கதாநாயகி தனலட்சுமி. முக லட்சணம் பார்வையாளர்களை கவர்கிறது. குடிகாரனான கதாநாயகனை காதலிக்கிறார். காதலனின் குடிப் பழக்கத்தால் சங்கடங்களை சந்திக்க நேர்கிறது.
அளவான நடிப்பு , பாடல் காட்சியில் ஆடும் போது சற்றுக் கவர்ச்சியைக் காட்டி பார்வையாளர்களை இழுக்கிறார். குடும்பத்தோடு படம் பார்த்தால் இந்தக் கவர்ச்சி எல்லாம் எடுபடுமா ?
துணை நட்சத்திரங்கள் :-
வழக்கமான அழுகை , ஒப்பாரி , கதறல் இல்லாமல் ரமாவை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.
கல்கி ராஜா :-
கதாநாயகனின் நண்பனாக இந்தப் படத்தில் நடிக்கிறார். தன் மனைவி இறந்ததைக் கூட பொருட்படுத்தாமல் பிணத்தின் அருகில் அமர்ந்து குடிக்கிறார். அந்தக் குடிக்கு அடிமையாகிறார்.
கதைக்கு பொருந்துகிற புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். பரவாயில்லை.
கௌரவ வேடத்தில் மொட்டை இராஜேந்திரன் நடித்திருக்கிறார். பூண்டை அதிகமாக பயன்படுத்தி கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார். கலகலப்புக்கு உதவுகிறார்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- ஜெ.ஹாரிஸ் இவர் இராஜபாளையத்தின் சுற்று வட்டாரங்களையும் , பசுமை நிறைந்த வயல்வெளிகளையும் , சோளக் கொல்லையும் தன் வண்ணக் காமிராவால் கதைக்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இசை :- சஜினா சேவியர் இசையில் உருவான பாடல்கள் ” தீபாவளி பொங்கல் வசூல் நாங்க தான் ” இன்னும் ஒரு பாடல் ” அழகா அழகா ” கேட்கும்படி உள்ளன. பழைய பாடல் ஒன்று ” தண்ணித் தொட்டியை தேடி வந்தக் கன்னுக்குட்டி நான் ” என்ற பாடல் ஒளிப்பரப்பு செய்ய தியேட்டரில் அத்தனை உற்சாகம். படத்திற்கு பின்னணி இசை போதுமானதாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நல்ல படம் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்ந்து பார்த்ததில் ஓர் உண்மை புலப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் சோம பானம் , சுரா பானம் உருவான இந்தப் பானங்கள் மன்னர்கள் பயன் படுத்தினார்கள். அதற்கு முன்பே சங்க காலத்தில் புறச் செய்தியில் கள்ளைப் பற்றியும் அதனை குடித்தவர்களைப் பற்றியும் நாம் படித்து அறிந்திருப்போம். அதுவே நாளாவட்டத்தில் கள் சாராயமாக மாறி பின்னர் சீமைச் சரக்காக மாறி குடிக்காத மக்களே நாட்டில் இல்லை என்ற நிலைமைக்கு வந்த இந்தக் குடியால் வந்த நிலையை எண்ணி வருந்துகிறோம். மது இல்லாத நாடு வேண்டும் என இந்தப் படம் வலியுறுத்துகிறது. குடிகாரனே பார்த்து திருந்தினால் உண்டு .எங்கள் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் வேறொரு படத்தின் திரைவிமர்சனத்தில் சந்திக்கும் வரை என்றும் உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்