
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்திற்காக அதிக பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு வரும் பரபரப்பான பேருந்து சண்டைக்காட்சி
சொந்தமாக பேருந்து வாங்கப்பட்டு ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா தலைமையில் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயா, அஜ்மல் பங்கேற்பு

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் ஆக்ஷன் டீசர் விரைவில் வெளியாகிறது
சச்சின் சினிமாஸோடு இணைந்து ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.

‘அக்யூஸ்ட்’ படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவும் திரைக்கதையின் முக்கிய அங்கமாகவும் திகழக்கூடிய பரபரப்பான சண்டைக்காட்சி ஒன்று கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லிக்கு அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா அதிக பொருட்செலவில் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்து இயக்கி வருகிறார்.

முழுக்க பேருந்தில் நடைபெறும் இந்த சண்டைக்காட்சிக்காக ‘அக்யூஸ்ட்’ தயாரிப்பாளர்கள் சொந்தமாக பேருந்து ஒன்றை வாங்கியுள்ளனர். சுமார் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயாவும் அஜ்மலும் ஸ்டண்ட் காட்சியில் பங்கேற்றுள்ளனர். உதயாவின் திரையுலக பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் ‘அக்யூஸ்ட்’ அதிரடி படத்தின் பேசுபொருளாக பேருந்து சண்டை இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மொத்தம் 3 சண்டைக்காட்சிகள் இடம்பெறும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் ஆக்ஷன் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் பேருந்து சண்டைக் காட்சியின் மேக்கிங் இடம்பெற்று ரசிகர்களை கவரும் என்று அவர்கள் கூறினர்.
ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் 10க்குள் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து கோடை விடுமுறைக்கு ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.
மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.