இதயம் முரளி’’’ திரை விமர்சனம்!

Share the post

இதயம் முரளி’’’ திரைவிமர்சனம்!

அதர்வா
ப்ரீத்தி முகுந்தன்
கயாடு லோஹர்
நாட்டி
தமன் எஸ்
நிஹாரிகா
ரக்ஷன்
திராவிட்
ஏஞ்சலின்
அஞ்சு குரியன்
சுதாகர்
யஷஸ்ரீ
ஜோனிடா இவர்கள் நடிப்பில்
எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார் தயாரித்து ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தமன் எஸ் இசையில் மனோஜ் பரமஹம்சா, சிஎச் சாய் ஒளிப்பதிவில் பிரதீப் இ ராகவ் எடிட்டிங்கில் ரமணகிரிவாசன் வசனத்தில் வெளி வந்திருக்கும் படம்
இதயம் முரளி……..

தொழில்நுட்பக் குழு:

கூடுதல் வசனங்கள் – ஆகாஷ் பாஸ்கரன், திராவிட் செல்வம்
பாடல் வரிகள் – விவேக்
நடன இயக்குனர் – அனுஷா விஸ்வநாதன்
இணை இயக்குனர் – எல்.கே.செந்தில்குமார்
ஆடை வடிவமைப்பாளர் – பல்லவி சிங் & மீனாட்சி என்
ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்
VFX மேற்பார்வையாளர் – பிரவீன் டி
ஒலி வடிவமைப்பு – சூன் ஜி, அழகியகூத்தன்
போஸ்ட் புரொடக்ஷன் சூப்பர்வைசர் – குணா
விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன்
PRO – சுரேஷ் சந்திரா, சதீஷ் (AIM)
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – தேவ் ராம்நாத்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கிருஷ்ண சந்தர் இளங்கோ
வரி தயாரிப்பாளர் – விக்கிஸ் ஆர்.ஏ
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – கே.ஸ்ரீதர் ராஜ், சடகோபன்
சந்தைப்படுத்தல் தலைவர் – மனோஜ் மேடி
தலைமை ஒப்பனை – எட்வர்ட் கென்னடி
உடுத்துபவர் – மூர்த்தி

கதை


முதல் காதல் தோல்வியில் முடிந்தால் மனம் துவண்டு போகாமல் அதற்கு மாமருந்தாக இன்னொரு காதலை தேடி தேடி அலைந்து காதலித்து அந்தக் காதலும் தோல்வியில் முடிந்து போக தொடர்ந்து காதலில் தோல்வியை சந்திக்கும் இப் படத்தின் கதைநாயகன் வேறு வழியில்லாமல் தன் மாமா பார்க்கும் பெண்ணையே மணக்க முன் வருகின்றார்.

காதல் தோல்வி உடல் வலியை விட மனத்தைக் காயப்படுத்தும் அந்த வலி மிக கொடுமையானது. அதற்கு மருந்தாக தன்னை நம்பி வந்த மனைவியை நேசிக்கலாம் அவளையே ஆத்மார்த்தமாக காதலிக்கலாம் என்ற முடிவுக்கு வரும் இக் கதைநாயகன் இதில் வெற்றிப் பெறுகின்றாறா என்பதே இக் கதை. இதனை கலகலப்பாக கொண்டு செல்வது தான் ” இதயம் முரளி “

சொல்லாமல் மறைத்த ஒருதலைக் காதல் தோல்வியில் முடிய மனத்தில் ஏற்பட்ட வலியை அந்தத் தோல்வியை வலியோடு சொன்ன படம் தான் அமரர் முரளியின் ” இதயம் ” என்னும் திரைப்படம்

காதல் தோல்வி தொடர் வண்டி போல தொடர ! ஒருதலை ராகம் இவர் வாழ்வில் ஒருமுறை அல்ல பலமுறை ! இதனை வேதனையாக நினைக்காமல் கலகலப்பாக கொண்டு செல்லவும் மனத்திற்கு இனிமை தரவும் முயற்சி செய்திருப்பது பெரும் முயற்சியே !

அதர்வா முரளியின் நடை உடை பாவனம் எல்லாம் புதுமையாக இருக்கிறது இப் படத்தில் . நடிப்பில் இன்னும் மெருகேற்றி இருக்கலாம் ! காதல் காட்சிகளில் சுண்டி இழுக்கின்றார் .

இப்படத்தில் கதைநாயகிகளாக வலம் வருபவர்கள் ப்ரீத்தி முகுந்தன் , கயாடு லோஹர் இவர்கள் பார்வையில் காதல் என்னும் மின்னல் பளிச்சென மின்னுகிறது ! சிரிப்பது என்பது பெண்ணுக்கே உரிய நிரந்தர சொத்து ! நவரசங்களில் ஒன்று இந்தச் சிரிப்பு ! இதனை இருவரும் கடைப்பிடிப்பது மிகச் சிறப்பு. கண் அடிப்பது ! இவர்களுக்கு உரிய உரிமை ! அதனை பயன் படுத்தி இருப்பது மிக அருமை !

நடிகர்கள் பட்டாளம் ஏராளம் ! இவர்களை தாராளமாக பயன்படுத்தி இருக்கின்றார் இப்படத்தின் இயக்குநர்.

கதைநாயகன் அதர்வா முரளியின் மாமாவாக நடித்திருப்பவர் நட்டி நடராஜ் நடிப்பில் யாரையும் முன் மாதிரியாக காட்டாமல் இயல்பாக நடித்திருப்பது சிறப்பு.

தமன்.எஸ் , நிஹாரிகா , ரக்‌ஷன் , டிராவிட் , ஏஞ்சலினா , அஞ்சுகுரியன் , சுதாகர் , யாஷாஸ்ரீ , ஜோனிதா… நடிகர் , நடிகையர் பட்டாளம் தன் நடிப்பில் நகைச்சுவை விருந்து படைக்கின்றனர் , சிறந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி உயர்ந்து நிற்கின்றார்கள் இந்தப் படத்தில் …

இத் திரைப்படத்தின் இயக்குநரின் எண்ணங்களை திரையில் வண்ண ஓவியங்களாக ஒளிப்பதிவு மூலம்
வண்ணம் தீட்டுகின்றார் இத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

திரைக்கதை என்பது திரைப்படத்தின் முதுகு எலும்பை போன்றது. இதனையும் தாண்டி தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் படத்திற்கு வலுவூட்டி சிறப்பித்திருக்கின்றார்இப் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா… இவரை நாம் பாராட்டலாமே !

இசைக்கு மயங்காத உயிர்கள் இந்த உலகத்தில் இல்லை. அதனை நிரூபணம் செய்து இருக்கின்றார் இப் படத்தின் இசையமைப்பாளர் தமன்.எஸ் இவர் இசையில் உருவான பாடல்கள் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவை தான்.இந்தப்பாடல்கள் இரசிகர்கள் மனத்தில் வலம் வருமா ?

இசைக்கருவிகள் இயற்கையாக இசைக் கலைஞர்கள் பயன்படுத்தினால் சிறப்பாக இருந்திருக்கும்.இசைக் கலைஞர்களை நேரடியாக பயன்படுத்தாத எந்த இசையும் இரசிகர்கள் மனத்தில் நிலைத்து நிற்பது இல்லை

ஒரு திரைப்படம் படத்தொகுப்பாளரின் மேஜையில் தான் உருவாகிறது. நடிகர் நடிகையர்கள் என்னதான் உருகி உருகி நடித்தாலும் இறுதியில் படத்தொகுப்பாளர் சொதப்பினால் அந்தப் படம் பின்னடைவு தான்.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவனின் இப் படத்தில் வரும் பிரமாண்ட காட்சிகளை சிதைக்காமல் , சேதாரம் இல்லாமல் படத்தொகுப்பு மூலம் தரமாக தொகுத்து இரசிகர்களிடம் இப் படத்தை கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.

கதையை நகர்த்துவது திரைக்கதை என்றாலும் இடை இடையே இரசிகர்களை சிரிக்க வைப்பதும் , சிந்திக்க வைப்பதும் உயிரோட்டமான வசனங்களே ! அந்த வகையில் இப்படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர் ரமணகிரிவாசன். கூடுதல் வசனங்களை அள்ளி வழங்கியிருப்பவர்கள் ஆகாஷ் பாஸ்கரன் , டிராவிட் செல்வம். நகைச்சுவையில் வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காதல் காட்சிக்கு வசனங்கள் தனி முத்திரையை பதிக்கவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.

படத்தின் கேப்டன் திரைப்பட இயக்குநர் . இப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் தன் எண்ணங்களை எழுத்து வடிவத்தில் மிக நேர்த்தியாக இப் படத்தில் சொல்லியிருக்கிறார். கதைநாயகர்கள் படங்கள் தோறும் காதலில் வழுக்கி விழுவதும். விழுந்தவர்கள் மீண்டும் எழுந்திருக்க முயற்சிப்பதும். அது முடியாமல் சில வேளையில் விழுந்தே கிடப்பதும் சகஜம் தான்.

படக் காட்சியில் பிரம்மாண்டமாக காட்டி இரசிகர்களை இருக்கையில் உட்கார வைத்திருக்கின்றார் இப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் . வெற்றி பெறுவார் ஐயமில்லை !

திரை விமர்சனத்தில் ” இதயம் முரளி ” இரசிகர்கள் மனத்தை தொடும் என்ற நம்பிக்கையை ஊக்கமாக , நடுநிலையாக விமர்சனம் செய்கிறது…இனி ஒரு படத்தில் சந்திப்போம்
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது


கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்;

ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *